Monday, January 30, 2012

காமெடி

எதாவது எழுதனுமேன்னு சும்மா மோட்டுவளைய பார்த்தப்ப அந்த கன நேரத்தில வந்து உதித்த ஞானோதயம் என்னவென்றால்... இப்போ இருக்கிற சினிமா காமெடி ட்ரென்ட் , நம்ம சக மனுஷனோட பேசறப்போ எப்படி அதோட வேலையை காட்டுது..?? சும்மா "ஓட்டுறது.."., கிண்டல், கேலி யோட அடுத்த வெர்சன். எவனாவது ஒருத்தன் சிக்கிட்டா போதும். அவனை அதல சிதல ஆக்கிடுவானுங்க (அதில் அடிக்கடி சிக்கும் பலியாடு அடியேன் தான்). ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த உரையாடல் முறைக்கும் இப்போ இருக்கும் முறைக்கும் எவ்வளவு வித்யாசம்...??. இப்போ மக்கள் வடிவேலு வசனம், கவுண்டமணி வசனம், சந்தானம் வசனம்.. இது மூனை தாண்டி வேற எது மாதிரியும் பேசுறது இல்ல. இங்க யாரையும் குறை சொல்லல, ஆனா , கருத்தான ஒரு உரையாடல் 'மொக்கை' என்று அழைக்கப்படுவதை நான் தினமும் காண்கிறேன்... இதை பற்றி மேலும் பேசலாம்...

Saturday, January 28, 2012

வணக்கம்

வணக்கம்,
தமிழில் இடுகை பதிவுகள் செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை, இப்போது தான் அந்த ஆசையை செயலாக்கம் செய்ய தொடங்கியுள்ளேன். எனக்கு தோன்றும் எண்ணங்களை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் இங்கே பதிவு செய்ய போகிறேன். போக போக பார்க்கலாம், இப்போதைக்கு அவ்வளவுதான் ...

நன்றி!